சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அறிவியல்,சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சரிதம் ஆகிய தலைப்புகளில், ஓங்கில் கூட்டம் சிறு நூல்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இயற்பியலில் நோபெல் பரிசு பெற்ற சர் சிவி,ராமன் எழுதிய இக்கட்டுரை, கமலாலயன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு, அமேசானில் சிறு மின்னூலாக வெளியாகியிருக்கிரது.
மழை நீர் சேமிப்புப் பற்றிய விழிப்புணர்வு, அண்மை காலமாகத் தான் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால், தொலைநோக்குடன் நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து சர் சி.வி.ராமன் எழுதியிருப்பது, வியப்பளிக்கும் செய்தி.
இக்கட்டுரையிலிருந்து சில வரிகள் மட்டும்:-“இந்திய வேளாண்மையின் மிகப்பெரும் பகுதி, பருவமழையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கின்றது. ஆகவே மழை நீரின் பெரும்பான்மை அளவு ஓடைகளாகவும், நதிகளாகவும் பெருக்கெடுத்து ஓடிக் கடைசியாகக் கடலில் சென்று சேரும் நிலைமை, பெரும் தேசிய பிரச்சினையாகும் சாத்தியமான ஒவ்வோர் இடத்திலும் பொருத்தமான வகை மரங்களைத் திட்டமிட்ட முறையில் வளர்ப்பதும், இந்தியாவின் அவசரத் தேவைகளில் ஒன்று”
உயிர்க் காக்கும் நீரின் முக்கியத்துவம் குறித்துச் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.
. வகை – மொழிபெயர்ப்பு | சிறுவர் கட்டுரை அமேசான் மின்னூல் |
ஆசிரியர் தமிழாக்கம் | சர்.சி.வி.ராமன் கமலாலயன் |
வெளியீடு ஓங்கில் கூட்டம் | அமேசான் மின்னூல் இணைப்பு:- https://www.amazon.in/dp/B099Q3MXZV |
விலை | ₹ 49/- |