சிட்னி எங்கே?

Sydneyenke_pic

பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார். 

சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி.  இதன் மார்பு வெள்ளையாகவும், இறகுகள் நீலமாகவும் இருக்கும்.  

“இன்று மாலை நீண்ட தூரம் பயணம் போகிறோம்; எங்கும் போய்விடாதே” என்று அதன் பெற்றோர் எச்சரித்தும், சிட்னி ஒரு தும்பியைத் துரத்திக் கொண்டு செல்கிறது. அதைத் தேடுவதற்காகப் புகை போக்கிக்குள் சென்று மீள்கிறது. அதன் இறகுகள் புகை படிந்து கருப்பாகி, அடையாளமே மாறிவிடுகின்றது. தூரமாகச் சென்றுவிட்டதால், திரும்பி வர வழியும் தெரியவில்லை.

ஆர்வக்கோளாறினால் அது செய்த சிறிய தவறுக்கு, என்ன விதமான விளைவுகளை அது சந்தித்தது? அது மீண்டும் பெற்றோரிடம் வந்து சேர்ந்ததா? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள். 5-12 வயது குழந்தைகளுக்கேற்ற கதை.

வகைமொழிபெயர்ப்புச் சிறார் கதை
ஆசிரியர் – மூலம் தமிழாக்கம்பாவ்லா பிக்காசோ எழுத்தாளர் உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991
விலைரூ 40/-
Share this: