ஒரு ஊரில் ஒரு அண்ணனும் தங்கையும் இருந்தனர். அவர்களிடம் ஒரு சிவப்புக் கொண்டை சேவல் இருந்தது. அவர்களுடைய பெற்றோர் இறந்துவிட்டனர்.
பசியால் வாடிய இருவரும் ஒரு தானிய மணியைக் கொல்லையில் புதைக்கின்றார்கள். அது ஒரே நாளில் வானளாவ வளர்ந்து விடுகின்றது. அண்ணன் மரத்தில் ஏறி வானத்துக்குச் செல்கிறான்.
வானத்து வீட்டில் ஒரு சூனியக்காரக் கிழவியிருக்கிறாள். அவன் அவளிடம் இருந்து ஒரு மந்திரத் திரிகையைக் கைப்பற்றிக் கொண்டு வருகின்றான். அதைச் சுற்றினால் விதவிதமான பணியாரங்கள் வெளியில் வந்து விழும்.
அரசன் ஒரு நாள் அதை அவர்களிடமிருந்து பறித்துச் சென்றுவிடுகின்றான். அரசனிடமிருந்து சேவல் எப்படிச் சாதுர்யமாக அதை மீட்டுக் கொண்டு வந்தது என்பது தான் கதை.
மாயாஜால கற்பனையுடன் கூடிய சுவாரசியமான கதை. வழ வழ தாளில் அழகான வண்ணப்படங்கள் நிறைந்து, வாசிக்கும் குழந்தைகளை மகிழ்விக்கும் கதை.
வகை | மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை |
ஆசிரியர் தமிழாக்கம் | கரேலிய நாட்டுக் கதை கொ.மா.கோ.இளங்கோ |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 45/- |