பாட்டுக்காரப் பனிக்குருவி

Pattukkara_panikkuruvi_pic

இதிலுள்ள மூன்று வட சோவியத் கதைகளும், ஆங்கிலம் வழியே  தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல் கதை பாட்டுக்காரப் பனிக்குருவி. இதில் அம்மா பனிக்குருவி தன் குஞ்சுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கின்றது. ஒரு நாள் காக்கா இந்தப் பாட்டைத் திருடி எடுத்துச் சென்று விடுகின்றது.

தாலாட்டு இல்லாமல் குஞ்சு தூங்க அடம் பிடிக்கின்றது. அப்பா குருவி வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு அந்தக் காக்காவைத் தேடிப் போகின்றது. அது காக்காவைக் கண்டுபிடித்து, பாட்டை மீட்டுத் திரும்பியதா என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘மூன்று முயல்குட்டிகள்’ என்ற அடுத்த கதையில், முயல் குட்டிகள் பெரிதாக வளர்ந்தவுடன் ஒரு ஈட்டியை எடுத்துக் கொண்டு காட்டுக்கு  வேட்டைக்குச் செல்கின்றன. வழியில் ஒரு கரடியைச் சந்திக்கின்றன. அவைக் கரடியிடம் இருந்து எப்படித் தப்பித்தன என்பது மீதிக்கதை.

‘கொக்கும் தவளையும்’ என்ற மூன்றாவது கதையில் கொக்குவிடம் போய் வலிய பேச்சுக் கொடுத்து வம்புக்கு இழுக்கிறது தவளை. ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழியை நினைவுபடுத்தும் கதை!

வழ வழ தாளில் வண்ணப்படங்கள் நிறைந்து குட்டிக் குழந்தைகள் வாசிக்க ஏற்ற நூல்.

வகை மொழிபெயர்ப்புமொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள்
ஆங்கிலம்
தமிழாக்கம்
அன்னா கார்ஃப்
சரவணன் பார்த்தசாரதி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 944960935
விலைரூ 45/-

Share this: