குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் சூழல் தற்போது அதிகமாகி இருப்பது வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். கவின் கிருஷ்ணா என்ற குழந்தை படைப்பாளர் சொன்ன ஐந்து குட்டிக் கதைகள் இதில் உள்ளன. இந்தக் கதைகளுக்கான கறுப்பு வெள்ளை ஓவியங்களையும் மாணவர்களே வரைந்து இருப்பது சிறப்பு.
‘நரியும் ஆமையும்’ கதையில் இரண்டும் நண்பர்கள். திராட்சை பறிக்க முடியாத நரி நண்பனுக்கு, ஆமை கரடி மாமாவிடம் சொல்லிப் பழம் பறித்துக் கொடுக்கிறது. காக்கா, நண்டு கதையிலும் உடல்நிலை சரியில்லாத காக்காவை, டாக்டரிடம் காட்டிக் குணப்படுத்துகிறது நண்டு.
‘ஷார்க்கை அடித்த மின்னல்’ கதையில், மீன்களைத் தின்ற ஷார்க்கைக் கடல்தேவதையும் சூரியனும் சேர்ந்து, குட்டி மீனாக மாற்றிவிடுகின்றன. இப்படி எல்லாக் கதைகளுமே முடிவில் “எல்லாரும் ஹாப்பியா இருந்தாங்களாம்” எனச் சுபமாக முடிகின்றன.
குழந்தைக்கே உரிய லாஜிக் இல்லாத அதீத கற்பனையுடன் கூடிய கதைகள் என்பதால், மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றன. இவை, 6-9 வயதினர்க்கான கதைகள்.
வகை | சிறார் கதைகள் |
ஆசிரியர்:- | கவின் கிருஷ்ணா (குழந்தை படைப்பாளர்) |
வெளியீடு:- | கவிநயா பதிப்பகம், 4/53 ஏ.ஆர்.எஸ். மேற்குத் தெரு, இடைகால், தென்காசி வழி. செல்:- 9865760345. |
விலை | ரூ 55/- |