சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பொதுச்செயலாளர்.
‘அம்மாவின் சேட்டைகள்’ உட்பட, நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான வாசிப்பு நூல்களை எழுதியுள்ளார். புத்தகப் பூங்கொத்து, இளந்தளிர் இலக்கியத்திட்டம், வாசிப்பு இயக்கம் ஆகியவற்றிலும், அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘வாழ்வியலாகும் கல்வி’, ‘புற்றிலிருந்து உயிர்த்தல்’ நூல்களும் முக்கியமானவை.