ஒரு தோட்டத்தில் முருங்கை மரமும், கறிவேப்பிலை மரமும் இருந்தன. முருங்கை மரத்தில் கம்பளி பூச்சிகளும், கறிவேப்பிலை மரத்தில் வண்ணத்துப் பூச்சியின் புழுக்களும் நிறைந்து இருந்தன.
அழகாக இருந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள், முட்களும் ரோமமும் நிறைந்த கம்பளி பூச்சிகளின் தோற்றத்தைக் கிண்டல் செய்தன.
முடிவில் என்ன ஆனது? கர்வம் கொண்ட வண்ணப்புழுவுக்குப் புத்தி வந்ததா? அதற்குப் புத்தி புகட்டியது யார்? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள்.
ஆசிரியர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த அழகான வண்ண ஓவியங்கள் நிறைந்த படக்கதை. வழவழப்பான தாளில் பெரிய எழுத்துக்களில் குழந்தைகளை ஈர்க்கும் புத்தகம்.
4+ வயதுக் குழந்தைகளுக்கேற்ற சிறார் சித்திரக்கதை!
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 30/- |