ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது. தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது.
இரவில் இரையைப் பிடிக்க கண் தெரியாமல் இளைத்துப் போகின்றது. முடிவில் அது ஆசைப்பட்டபடி சிறகுகள் முளைத்ததா? அதற்குப் படிப்பினை கிடைத்ததா? என்பதை எல்லாம், கதையை வாங்கி, வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆசிரியர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த அழகான வண்ண ஓவியங்கள் நிறைந்த படக்கதை. வழவழப்பான தாளில் பெரிய எழுத்துக்களில் குழந்தைகளை ஈர்க்கும் புத்தகம்.
4+ வயதுக் குழந்தைகளுக்கேற்ற சிறார் சித்திரக்கதை!
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 30/- |