பென்சில்களின் அட்டகாசம்-2.0

Pencil_2

ஏற்கெனவே வெளிவந்த பென்சில்களின் அட்டகாசம் கதையைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது.

முதல் கதையில் பென்சில்கள் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்கின்றன.  ஆனால் இந்த முறை பென்சில்கள் செய்த போராட்டம் ஊரையே ஒரு கலக்கு கலக்குகின்றது! 

திடீரென்று ஒரு நாள் தூரிகாவின் இரண்டு பென்சில்களைக் காணவில்லை.  அவற்றைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி துப்பறிவாளர் டிகாவை அணுகுகின்றாள் தூரிகா.  டிகா கண்டுபிடித்திருக்கும் நவீன ரோபோவின் பெயர் மோசி.

மோசி தூரிகாவின் பென்சில்களைக் கண்டுபிடிக்கும் வேலையைத் துவங்குகிறது.   அப்போது தான் ஊரிலிருந்த, கடையிலிருந்த எல்லாப் பென்சில்களுமே, காணாமல் போன விபரம் தெரிகிறது.  பென்சில்கள் காணாமல் போன செய்தி, தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸாக ஓடுகின்றது.

பென்சில்கள் எல்லாம் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையே கைப்பற்றிவிடுகின்றன.  போராட்டம் நடத்தும் பென்சில்களுடன் மோசி பேச்சு வார்த்தை நடத்துகின்றது.

அவை வைக்கும் கோரிக்கையை வேறு வழியின்றி முடிவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக்கொண்டு முடிவை அறிவிக்கின்றார். போராட்டத்தில் வெற்றி பெற்ற பென்சில்களுக்குக் கொண்டாட்டம்!  அதை விடக் குழந்தைகளுக்கோ படு மகிழ்ச்சி! 

ஒவ்வொரு குழந்தையும் தன் பென்சிலுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது.  எந்தக் கோரிக்கையை முன் வைத்துப் பென்சில்கள் போராட்டம் செய்தன? மாவட்டத் தலைவர் என்ன அறிவிப்பு செய்தார்?  என்பதையறிய புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

குழந்தைகள் புரிந்து கொள்ளக் கூடிய எளிய நடையுடன் கூடிய இலகுவான மொழி.

வண்ண ஓவியங்களுடன் விறுவிறுப்பான நடையில் சொல்லப் பட்டுள்ள கதை, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!

அவசியம் இப்புத்தகத்தை வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்விழியன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 (+91 8778073949)
விலை₹ 95/-
Share this: