பேதமற்ற நட்பு

Pethamatra_pic

நெட்டையன் என்ற ஒரு ஒட்டகசிவிங்கியும், குறும்பன் என்ற அணிலும் நண்பர்கள்.

குறும்பன் நெட்டையனின் கழுத்தில் சறுக்கி விளையாடும். குறும்பனை முதுகில் ஏற்றிக் கொண்டு நெட்டையன் காட்டைச் சுற்றி வரும். ஒரு நாள் மேகன் என்ற அணில் குறும்பனைக் கிண்டல் செய்கிறது. நம் இனம் இல்லாத ஒட்டகச்சிவிங்கியிடம் நீ எப்படிக் கூட்டு சேர முடியும் என்று கேட்கிறது.  இதனால் குழப்பம் அடைந்த குறும்பன், நெட்டையனிடம் இருந்து விலகுகிறது.

அவைகளுக்கிடையில் பழைய நட்பு மீண்டும் துளிர்த்ததா?முடிவு என்ன ஆச்சு? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கிக் குழந்தைகளிடம் வாசிக்கக் கொடுங்கள்.

அழகான வண்ணப்படங்களுடனும், வார்த்தைகள் குறைவாகவும் இருப்பதால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வாசிக்கக் கொடுக்கலாம். பெற்றோர் வாசித்தும் காட்டலாம்.

வகை – மொழிபெயர்ப்புமொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
ஆசிரியர் தமிழாக்கம்ராமேந்திர குமார் சுகானா
வெளியீடுநேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா,புதுடில்லி (NBT.INDIA)
விலைரூ 50/-
Share this: