இந்த உக்ரேனிய நாடோடிக் கதையை எழுதியவர், லீஸ்யா உக்ரேன்கா. மேரி ஸ்க்ரிப்நிக் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கம் செய்துள்ளார், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி.
பெரிய எழுத்துகளுடன் வண்ணப்படங்கள் நிறைந்த இந்தக் கதைப்புத்தகம் சின்னக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்றது. டனிஸ் என்ற சிட்டுக்குருவி, யாரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாமல் முட்டாளாக இருக்கிறது.
சில நாட்களுக்குப் பிறகு தன் அறிவை வளர்த்துக் கொள்ள சிட்டுக்குருவி விரும்பியது. கோழி, நாரை, காக்கா, ஆந்தை,கரிச்சான் குருவி ஆகியவற்றைச் சந்தித்து அறிவுரை கேட்டது. அவை அனைத்தும் அதற்கு அறிவுரை சொல்ல மறுத்துவிட்டன.
கடைசியாக ஒரு அண்டங் காக்காவைச் சிட்டுக்குருவி பார்த்தது. அது சொன்ன அறிவுரை என்ன? சிட்டுக்குருவிக்கு அது எந்த விதத்தில் பயன்பட்டது என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.
வகை – உக்ரேனிய நாடோடிக்கதை | மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை |
ஆசிரியர் – ஆங்கிலம் தமிழாக்கம் | மேரி ஸ்க்ரிப்நிக் சரவணன் பார்த்தசாரதி |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 45/- |