பச்சைக்கிளிகளின் சண்டை

Pachaikilikalin_pic

ஒரு அத்தி மரத்தில் நிறைய பழங்கள் இருந்தன. அம்மரத்தில் சில பச்சைக்கிளிகள் இருந்தன.

அத்திப்பழங்களைத் தின்ன புதிதாக ஒரு பச்சைக்கிளி கூட்டம் வந்தது. ஆனால் அம்மரத்தில் இருந்த கிளிகள், “இது எங்கள் மரம்” என்று சொல்லி அந்தக் கிளிக்கூட்டத்தைத் துரத்திவிட்டன.

அத்தி மரம் காய்த்து முடிந்து விட்டது. உணவு தேடி கிளிகள் பறந்து சென்றன. அங்கே ஒரு கொய்யா மரத்தில் பழங்கள் இருந்தன. அவற்றைத் தின்ன அத்தி மரக்கிளிகள் சென்றன. அம்மரத்தில் அவை துரத்தி விட்ட கிளிகள் இருந்தன.

அவை அத்திமரக்கிளிகளுக்குக் கொய்யா பழங்களைத் தின்ன அனுமதி தந்தனவா? முடிவு  என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள கதையை வாங்கி வாசியுங்கள்.

வழவழப்புத் தாளில் அழகான வண்ணப்படங்கள் நிறைந்த சித்திரக்கதை.  4+ வயது குழந்தைகளுக்கானது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த வண்ண ஓவியங்கள் அருமை!

வகைசிறுவர் சித்திரக்கதை
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935
விலைரூ 30/-
Share this: