வேதியியல் நோபல் பரிசு – 2024

Hassabis_pic

நம் உடலில் உள்ள புரதங்களை அமினோ அமிலங்களால் ஆன சங்கிலித்தொடரால் கட்டப்பட்ட கட்டுமானங்கள்(building blocks) எனலாம். இவை நீண்டும், உருண்டும், சுருண்டும், மடிந்தும் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.

Protein Pic:- Thanks:-https://www.bbc.com/tamil

நம் உடலில் பல லட்சம் புரதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புரதத்தின் வடிவத்தையும் கண்டறிந்து, அதன் குணத்தை மாற்றுவது மருத்துவத் துறைக்கு மிகவும் சவாலான செயல். எனவே அறிவியல் அறிஞர்கள் காலங்காலமாக ஒவ்வொரு புரதத்தின் தனித்துவமான வடிவத்தைக் கண்டறிவதற்காகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குத் தற்போது கணினி செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவுகிறது.

டேவிட் பேக்கர் (David Baker)அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் 2003ஆம் ஆண்டு அமினோ அமிலங்களைப் பயன்படுத்திப் புதிய வகை புரதத்தை வடிவமைத்தார். இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. இவர் இந்தப் புரதத்தை வடிவமைக்கக் கணினியின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்.  

டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis), செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’டின் (Google DeepMind) இணை நிறுவனர். இவருடன் இணைந்து பணியாற்றியவர், ஜான் ஜம்பர் (John Jumper). இவர்களது கணினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வுகள் புரதங்களைப் புரிந்து கொள்ள மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படுகின்றன.

இம்மூவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

ஆசிரியர்,

சுட்டி உலகம்.  

Share this: