நர்மதா தேவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தவர். பாலினச் சமத்துவக்காகப் பணியாற்றிய IWID நிறுவனத்தில் மூத்த திட்ட அலுவலகராகப் பணியாற்றியவர். அண்ணா FM, பொதிகை, புதுயுகம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஆய்வாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். தினமலர் ‘பட்டம்’ மாணவர் பதிப்பில் உதவி ஆசிரியராகச் சிறார்க்குச் சமூகம், அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கியவர். சி.பி.ஐ.(எம்) தமிழ்நாடு மாநிலக் குழுவின் டிஜிட்டல் ஆவணக்காப்பகமான சி.பி.ஐ(எம்) கருவூலத்தின் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
‘கசின் பார்ட்’ என்ற நான்கு நிமிட பிரெஞ்சு அனிமேஷன் குறும்படத்தைத் ‘சாந்தநாயகம் ஆணா, பெண்ணா?’ என்ற தலைப்பில், தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் குறித்தும் அவர்கள் விடுதலைக்கான பாதை குறித்தும், இவரெழுதிய ‘பெண்-அன்றும் இன்றும்’ என்ற நூலைப் பாரதி புத்தகாலயம், சென்னை வெளியிட்டுள்ளது.