கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் அடைபட்ட குழந்தைகளுக்குத் தொலைகாட்சி, வீடியோ விளையாட்டு எல்லாம் அலுத்துப் போகின்றது. மின்மினி என்ற சிறுமிக்குப் பொழுது போகாமல் போரடித்ததால், பாட்டி அவளுக்கு மூன்று கதைகள் சொல்கின்றார்.
முதல் கதை சுட்டிப்பயல் சுந்தா. குறும்புத்தனத்துடன் சேட்டை செய்யும் சுந்தாவின் கதை, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இரண்டாவது நிலாப்பெண்ணின் கதையில், நிலா கீழிறங்கி வந்து குழந்தையுடன் விளையாடும் பேன்டசி கதை. மூன்றாவது நிலா அளிபளிப்பாகக் கொடுத்த வெண்மதி நாய்க்குட்டியின் உதவியுடன், பொன்னி சாகசம் செய்யும் கதை. அவர்கள் செய்த சாகசம் காவல் துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.
அவர்கள் என்ன சாகசம் செய்தார்கள்? அதனால் என்ன நன்மை விளைந்தது? என்று அறிந்து கொள்ள அவசியம் இந்நூலை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.
வகை | சிறுவர் கதை மின்னூல் |
ஆசிரியர் | ‘C.Puvana’ புவனா சந்திரசேகரன் |
வெளியீடு இணைப்பு:- | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B086QZ1MKH |
விலை | ₹ 49/- |