ஜிமாவின் கைபேசி

Jimabook_photo

ஜிமா என்றழைக்கப்படும் ஜி.மானஸா, மூன்றாம் வகுப்பு மாணவி.  அவளுக்குக் கைபேசி ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து சிம் கார்டு போல, கைபேசியின் பின்னால் செருகவே, அதற்கு உயிர் வந்துவிடுகின்றது.

கைபேசியில் அவளுடன் உரையாடும் அந்த அழகான பெண்ணுக்கு டிப்பி என்று பெயர் வைக்கிறாள் ஜிமா.  டிப்பி பல புதிய விஷயங்களை ஜிமாவுக்குக் கற்றுக் கொடுக்கின்றது.  கைபேசி வழியாகச் செய்யக்கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப ஐடியாக்களை, ஜிமா தெரிந்து கொள்கிறாள். அறிவியல் அறிஞரின் தொடர்பும் அவளுக்குக் கிடைக்கின்றது.  பள்ளி அறிவியல் கண்காட்சியில் பல புதிய மாதிரிகளை ஜிமா உருவாக்கி அசத்திப் பரிசு பெறுகிறாள். 

டிப்பி மூலம் இன்னும் அவள் என்னென்ன புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்?  டிப்பிக்குக் கடைசியில் என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்.

“ஜிமாவின் கைபேசி வழியாகச் செவ்வாய்க் கிரகத்துப் பெண்ணுடன் பேச வேண்டும்; தூக்கத்தில் கடலுக்கு மேல பறக்குற கனவு வரவேண்டும்; வயர் கனெக்‌ஷனே இல்லாம, வீட்டுல எல்லா லைட்டும் எரிய வேண்டும்” என்று ஜிமாவின் தோழிகள் ஆசைப்படும் பகுதி சிறப்பு.    

கைபேசியின் வழியாக எதிர்காலத்தில் செயல்படுத்தக் கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களைச் சிறுவர்க்குச் சுவாரசியமாகச் சொல்லி, அறிவியலில் நாட்டம் ஏற்படுத்தும் சிறந்த சிறார் அறிவியல் புனைகதை.   .

வகைசிறார் அறிவியல் கதை
ஆசிரியர்கொ.மா.கோ.இளங்கோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 9498002424
விலை₹ 50/-
Share this: