இந்தச் சிறார் குறுநாவலில் மல்லி என்ற சிறுமி, நாய், கிளி என்று ஏதாவது ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்படுகிறாள். ஆனால் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவள் விருப்பத்துக்குத் தடை போடுகின்றனர். அவள் நண்பன் தீபன் பள்ளி விடுமுறையில் அமெரிக்காவில் இருந்து அவள் ஊருக்கு வருகிறான். அவன் ஏற்கெனவே மல்லி வகுப்பில் ஒன்றாகப் படித்தவன்.
“அமெரிக்காவில் வெள்ளைக்காரச் சிறுவர்கள் பல்லியைச் செல்லப் பிராணியாக வீட்டில் வளர்க்கிறார்கள்” என்ற தகவலைத் தீபன் அவளுக்குத் தெரிவிக்கிறான். அதைக் கேட்டு ஆச்சரியப்படும் மல்லி, “நானும் ஒரு பல்லியை வளர்க்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறாள்.
பல்லி குறித்து நம் சமூகத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. கெளளி சாஸ்திரம் நம் உடம்பில் பல்லி விழும் இடங்கள், அது ஒலி எழுப்பும் திசை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பலன்களைக் கூறுகிறது. அவை அறிவியல் அடிப்படையில் அமைந்த உண்மைகளா? என்பதை மெல்லிய நகைச்சுவை கலந்து, இந்த நாவல் விவரிக்கிறது.
மல்லி பல்லியை வளர்க்க ஆரம்பித்துத் தெரியாத பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறாள். அவளுக்குக் கிடைத்த சுவையான அனுபவங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள ஆசையா? உடனே இந்நாவலை வாங்கி வாசியுங்கள்! எளிய நடையில் வாசிக்கச் சுவாரசியமான சிறுவர் குறுநாவல்.
வகை | சிறார் நாவல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு | நிவேதிதா பதிப்பகம், சென்னை-92. செல் 89393 87296. |
விலை | ரூ 60/-. |