துளிர்

thulir magazine paperback cover

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்க்காக வெளியாகும் அறிவியல் மாத இதழ் ‘துளிர்’.  தமிழில் சிறுவர்க்கான அறிவியல் இதழ்கள், வெகு அபூர்வம்.    

ஏப்ரல் 2021 மாத இதழின் அட்டையை,, அழகான ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி அலங்கரிக்கிறது.  வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒரு காடு உருவாகும் என்ற உண்மையை விளக்குகிறது,, கூட்டுப்புழு பற்றிய கதை.

‘நூல் ‘ப(பி)டித்துச் செல்வோம்’ என்ற தலைப்பிலான, ஏப்ரல் 23- புத்தக தினத்துக்கான கட்டுரை, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.  

தேர்தல் வரலாறு பற்றியும், வாக்கு எந்திரம் பற்றியும் ‘தமிழ்நாட்டில் தேர்தல்’ என்ற கட்டுரை எடுத்துரைக்கிறது.  இளையோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள், இதில் உள்ளன.  இன்று ஆட்சி செய்பவர்களிடம், “சுற்றுப்புறத்தைப் பாதுகாத்துக் கொடுங்கள்; பூமியை அழித்து விடாதீர்கள்” என்று கேட்பதற்கு, உங்களுக்கு முழு உரிமை உண்டு என்று இளையோரைக் கேள்வி கேட்கத் தூண்டியிருப்பது, வரவேற்க வேண்டிய விஷயம்.

குதிரையின் வரலாற்றுச் செய்திகள், காட்டை ஆளும் மரங்கள் என்ற படக்கதை, வரலாறில் இடம் பெறாத பிரான்ஸ் நாட்டுக் கணித அறிஞர் சோபி ஜெர்மைன், குழந்தைகளுக்கு யூடியூப்பில் கதை சொல்லும் குடும்பம் கடல் குதிரை பற்றி அதிசய உண்மைகள், வானில் ஏப்ரல் மாதத்துக்கான  கோள்களின் நிலை எனச் சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளும், பொது அறிவு செய்திகளும் இந்த இதழில் உள்ளன.

விலை ரூ 10/- மட்டுமே.  அவசியம் வாங்கித் தந்து, சிறுவர்களை வாசிக்கச் செய்யுங்கள். 

வகைசிறுவர்க்கான அறிவியல் மாத இதழ்
வடிவம்அச்சு
வெளியீடுதுளிர் நிர்வாக அலுவலகம்,245,அவ்வை சண்முகம் சாலை,கோபாலபுரம், சென்னை-600086 (044-28113630)
விலைதனி இதழ்: ரூ 10/- ஆண்டுச்சந்தா: 100/-
துளிர்
Share this: