பூஞ்சிட்டு

poonchittu emagazine cover

 ‘பூஞ்சிட்டு’ மின்னிதழ், ஜூலை 15 முதல், ஒவ்வொரு மாதமும், 15 ஆம் தேதி, இணையத்தில் வெளியாகிறது.  பெரும்பாலும் பெண்களாலேயே நடத்தப்படும் இதழ் என்ற தனிச்சிறப்பு, இதற்குண்டு..

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில்,, குழந்தைகளுடன் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடும் பெண்களின் பங்களிப்பு, மிகவும் குறைவாக இருக்கிறது என்ற குறையைப் ‘பூஞ்சிட்டு’ போக்கி விட்டது எனலாம். 

குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் உயரிய நோக்கத்துடன்,  சிறுகதை, தொடர்கதை, மொழிபெயர்ப்புக் கதை, சிறார் நூல் அறிமுகம், ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.  ‘புதிர்வனம்’ பகுதியில், குழந்தைகள், சுவாரசியமான புதிர்களை விடுவித்து மகிழலாம்.  

‘இவர் யார் தெரியுமா?’ பகுதி,, சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்கின்து..  சிறார்களுக்கு இயற்கையின் பால், நாட்டத்தை ஏற்படுத்தும் விதமாக, ‘நம் தோழன்’ பகுதியில், பறவை அறிமுகமும், சிட்டு சொல்லும் டைனோசர் கதையும் இடம்பெறுகின்றன. 

‘ஊர் சுத்தலாம் வாங்க’ பகுதிக்குச் சென்றால், செலவில்லாமல் அமெரிக்காவுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் பயணம் செய்து, சுற்றிப் பார்த்து மகிழலாம். ‘அப்துல் கலாம் பக்கம்’ சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது.  தமிழக ஊர் பற்றியும், அந்த ஊருக்கு அப்பெயர் வரக் காரணமான, செவி வழிக் கதையும் கேட்க, ‘கதை கதையாம் காரணமாம்’ வாசிக்கலாம் 

குழந்தைகளின் உடல்நலத்தைப் பேண, பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள், ‘குட்டிபீமா’வில் வெளியாகின்றன.  மருத்துவர் எழுதும் தொடர் இது.

‘ஜிகினா’ பக்கத்தில், கலைப்பொருட்கள் செய்ய கற்றுக் கொள்ளலாம்.  ‘சிட்டோவியம்’ பகுதிக்குச் சென்றால், வீடியோ வழியாகச், சுலபமாக வரைய, கற்றுக் கொடுக்கிறார்கள்.   விளையாட்டுகளையும், அதன் மூலம் கணிதத்தையும் ‘ஆடுகளம்’ பகுதியில், எளிதாய்க் கற்றுக் கொள்ளலாம்.  

கதைகளையும், பாடல்களையும், பொருத்தமான படங்களுடன், இனிமையான குரலில், வீடியோவில் பார்த்தும், கேட்டும் இன்புறலாம்.  சிரி சிரி’ பகுதியின் நகைச்சுவை துணுக்குகளை, வாசித்துச் சிரித்து மகிழலாம். கூட்டாஞ்சோறு சத்தான, சுவையான உணவு வகைகளை அறிமுகம் செய்கிறது.

மொத்தத்தில் சிறுவர்கள் விரும்பும், பல்சுவை பகுதிகள் நிரம்பிய இதழ்.  குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, சிந்தனைத் திறனை வளர்த்தெடுக்க அவசியம் பூஞ்சிட்டு இதழை, அறிமுகம் செய்து, வாசிக்கச் சொல்லுங்கள். 

அதற்கான இணைப்பு:  பூஞ்சிட்டு

வகைகுழந்தைகளுக்கான மாத மின்னிதழ்
வடிவம்மின்னிதழ்
வெளியீடுபூஞ்சிட்டு குழு
விலைஇலவசம்
பூஞ்சிட்டு
Share this: