நாட்டுப்புறக் கதை பாணியில் அமைந்த சிறுவர் கதை. ஒரு மாடப்புறாவின் இரண்டு முட்டைகள் தவறிக் கிணற்றில் விழுந்து விடுகின்றன. அது அழுது கொண்டே சென்று ஆசாரி, பன்றி, வேடன், பூனை, யானை, குழந்தைகள், வாத்தியார் என்று பலரிடம் உதவி கேட்கின்றது. ஆனால் யாரும் அதற்கு உதவ முன்வரவில்லை.
கடைசியாக ஒரு எறும்பு அதற்கு உதவ முன்வருகின்றது. ‘நான் உன்னைக் கடிக்கப் போகிறேன்’ என்று யானையை மிரட்ட, அது பயந்து உதவுகிறது. அப்படியே புறா வரிசையாக உதவி கேட்ட அனைத்தும் சங்கிலித் தொடராக ஒன்றையொன்றை மிரட்டி உதவி செய்கின்றன. கடைசியில் புறாவுக்கு முட்டை திரும்பக் கிடைக்கின்றது.
வழ வழ தாளில் வண்ணப்படங்கள் நிறைந்து, சிறு குழந்தைகள் வாசிக்க ஏற்ற கதை.
வகை | சிறுவர் மொழிபெயர்ப்புக் கதை |
ஆசிரியர் – மலையாளம் தமிழாக்கம் | ஜெ.தேவிகா உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 35/- |