ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ.
ஒரு நாள் அவன் தலை மீது, ஒரு பொன் வண்டு மோதிவிட்டுப் பறந்து விட்டது. யார் மோதியது என்று அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். மேலே சூரியன் இருந்தது. எனவே சூரியனின் ஒரு பகுதி உடைந்து தன் தலை மேல் மோதிவிட்டது என்று எல்லோரிடமும் செய்தியைப் பரப்பினான். அதற்குப் பிறகு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள கதையை வாங்கி வாசியுங்கள்.
வண்ணப்படங்கள் நிறைந்து, ட்யூனோவின் குறும்பு நிறைந்த சேட்டையைச் சுவாரசியமாக விவரிக்கும் சின்ன கதை.
வகை – | மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை |
ஆசிரியர் – தமிழாக்கம் | நிகோலாய் நொசொவ் (Nikolai Nosov) சரவணன் பார்த்தசாரதி |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 45/- |