கிளியோடு பறந்த ரோகிணி

Kiliyodu_pic

இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது அவளுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மூலமாகக் கிளிகளின் வாழ்வு எவ்வளவு ஆபத்து நிறைந்தது; மனிதரின் வாழ்வு எவ்வளவு வசதி நிறைந்தது என்பதைக் கண்டு கொள்கிறாள். பறவைகளுக்கு மனிதரால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், சூழல் சீர்கேட்டையும் இக்கதை மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.

வானம் தன் அம்மாவென்றும், அம்மா சொன்ன கதைகள் தாம் நட்சத்திரங்கள் என்றும் குட்டிப்பாப்பாவிடம் நிலா கூறுவதாக அமைந்த கதை, ஆசிரியரின் சிறந்த கற்பனைக்கோர் எடுத்துக்காட்டு.

அந்நிய மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டகங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, மனிதர்கள் அவற்றைச் சுட்டுக் கொல்வதைக் கூறும் கதை, நெகிழ்ச்சியாக இருந்தது.

‘காகமும் எறும்பும்’ கதையில், தன் இனம் குறித்து மனிதரிடையே புழங்கும் மூடநம்பிக்கையைப் பற்றிக் காகம் எறும்புவிடம் கூறுவதாக எழுதியிருப்பது சிறப்பு. கறுப்பு நிறத்தை மட்டமாக நினைக்கும் மனிதரின் எண்ணத்தையும், இது கேள்விக்குள்ளாக்குகிறது.

‘புத்தக நண்பனும் பூதமும்’ கதை குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பின் அருமையையும், கைபேசியின் கெடுதல்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. இது 6 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான கதைத்தொகுப்பு.  அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்சி.சரிதா ஜோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 87780 73949
விலைரூ 45/-
Share this: