கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை

Kasappumaram_pic

ஒரு காட்டில் ஒரு நாவல் மரம் இருந்தது. அதன் பழங்களைத் தின்ன ஏராளமான பறவைகளும், அணில்களும் வந்தன. எல்லாம் தன் பழங்களைத் தின்பதைப் பார்த்து, மரத்துக்குக் கோபம். அதனால் சூ சூ என்று பறவைகளையும், அணில்களையும் நாவல் மரம் விரட்டியது. 

அடுத்த ஆண்டும் நாவல் மரம் பழம் பழுத்தது. பழங்களைத் தின்ன ஓடிவந்த பறவைகள் பழங்களைத் தின்று பார்த்து விட்டுத் தூ தூ என்று துப்பின. “ஒரே கசப்பு” என்று சொல்லிவிட்டு, ஓடி விட்டன.

தனியாக நின்ற மரத்துக்கு, அழுகையாக வந்தது. ஒரு சிட்டுக்குருவி அழுது கொண்டிருந்த மரத்திடம், காரணத்தைக் கேட்டது. மரத்துக்கு உடம்பு சரியில்லை என்றறிந்து, ஒரு மருத்துவரைக் கூட்டி வந்தது.

அந்த மருத்துவர் ஒரு மரங்கொத்தி. அது மரப்பட்டைகளில் இருந்த பூச்சிகளைக் கொத்தி வெளியே எடுத்தது. நாவல் மரத்தின் உடம்பு சுகமானதா? பழங்களின் கசப்புத் தன்மை நீங்கியதா? பறவைகள் மீண்டும் அம்மரத்தை நாடி வந்தனவா? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள்.

வழவழப்புத் தாளில் பெரிய எழுத்துகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற கதை. வண்ணப்படங்களை உ.நவீனா வரைத்திருக்கிறார்.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 9444960935
விலைரூ 30/-
Share this: