காணாமல் போன சிறகுகள் – அனுக்ரஹா கார்த்திக் (10 வயது)

Kanamal_Pona_Sirakugal

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் முதற்பரிசு வென்ற கதை)

ஒரு நாள் உலகத்தில் எல்லாப் பறவைகளுக்கும் இறக்கைகள் காணாமல் போய்விட்டன. அதற்கு பதிலாக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இறக்கைகள் வந்துவிட்டன. இந்த மாயத்தைச் செய்தது ஒரு மாயாவி. அவன் பெயர் அசோக்.

அவன் நல்லவன்தான், ஆனால் அவனுக்கு சிறகுகள் வேண்டும். ஏனெனில் அவனுக்கு சிறிய வயதிலிருந்தே பறக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அந்தக் காலத்தில் விமானம் எல்லாம் இல்லை.

அவனால் தன்னை மட்டும் பறக்க வைக்க முடியவில்லை. ஆதலால் எல்லாரையும் பறக்க வைத்தான். அவன் பறக்க வேண்டும் என்றால் எல்லாப் பறவைகளின் இறக்கைகளும் காணாமல் போய்விடும். அதனால்தான் எல்லா பறவைகளுக்கும் இறக்கைகள் காணாமல் போய்விட்டன.

இதை நினைத்து அவன் கவலைப்பட்டான். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் கவலையை மறந்துவிட்டு சந்தோசமாகப் பறந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மணி.

அவனும் தன் அப்பாவிடமிருந்து நிறைய வித்தைகளைக் கற்றுக் கொண்டான். அவனுக்கு அவனுடைய அப்பா எப்படி இறக்கைகள் வந்தன என்று சொன்னார். ஆனால் அதை நினைத்து அவன் வருத்தப்பட்டான்.

மணி வெளியே போய்ப் பார்க்கும் போது அங்கே எல்லாப் பறவைகளும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தன. அம்மா பறவையால் குழந்தைப் பறவைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை. அதனால் குழந்தைப் பறவைகள் சோர்வடைந்தன.  

அவன் தன் அப்பாவிடம், “நீங்கள் ஏன் இன்னும் இதை மாற்றாமல் இருக்கிறீர்கள்? அந்தப் பறவைகள் எல்லாம் கஷ்டப்பட்டுப் கொண்டு இருக்கின்றன” என்று சொன்னான்

“மகனே! பறவைகள் கஷ்டப்பட்டால் எனக்கு என்ன? என் ஆசை நிறைவேறிவிட்டது அல்லவா!” என்று அப்பா அசோக் சொன்னார்.

“ஆனால் அப்பா உங்கள் ஆசைதான் நிறைவேறிவிட்டது அல்லவா” என்று மணி கேட்டான்.

“மணி, எனக்கு இது பழகிவிட்டதுப்பா. என்னால் சிறகுகள் இல்லாமல் இருக்க முடியாது” என்று அப்பா சொன்னார்.

அதற்கு மேல் அவன் தன் அப்பாவின் பேச்சைக் கேட்காமல் தன் நண்பர்களிடம் போனான், நடந்ததைச் சொன்னான். மணிக்கு சிறகுகளைக் போக வைக்கும் வித்தை தெரியாது. அதனால் தன் அப்பாவிடம் போய்க் கேட்டான். ஆனால் அவன் அப்பா அவனுக்கு அதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அதனால் அவன் நண்பன் சிவாவின் அப்பாவிடம் போய்க் கற்றுக் கொண்டான். அவரும் ஒரு மாயாவிதான்.

“தம்பி, அது ரொம்ப கஷ்டம் தம்பி” என்று சிவாவின் அப்பா சொன்னார்.

“பரவாயில்லை மாமா. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் நான் அதைச் செய்வேன்” என்று மணி சொன்னான். அவன் அதைக் கற்றுக் கொண்டான். அந்த வித்தையை ஒரு அமைதியான இடத்தில் கஷ்டப்பட்டு தன்னால் முடிந்த அளவிற்கு பழகிப் பார்த்தான்.

மணியின் அப்பா அசோக் அந்த வித்தையை செய்யும் போது ‘ஜு பூம் பா’ என்று சொன்னார். மணி அதைத் திருப்பி ‘பா பூம் ஜு’ என்று சொன்னான். அதற்குப் பிறகு உலகம் பழையபடி மாறியது. அதோடு எல்லாப் பறவைகளுக்கும் இறக்கைகள் வந்துவிட்டன. மனிதர்களும் பழையபடி மாறிவிட்டனர்.

குழந்தைப் பறவைகளுக்கு அம்மா பறவை நிறைய உணவு தேடி வந்து கொடுத்தது‌. மணி, பறவைகள் பறப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

(நடுவர்களின் கருத்து:-  குழந்தைகளின் வித்தியாசமான கற்பனையைப் பதிவு செய்திருக்கும் இக்கதை, கோர்வையாகவும் எழுதப்பட்டிருந்ததால்,  நடுவர்களின் ஏகோபித்த பாராட்டையும், முதல் மதிப்பெண்ணையும் பெற்றது.   இப்பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல; எல்லா உயிர்களுக்குமானது; மனிதன் தன் மகிழ்ச்சிக்காகப் பிற உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்ற கருத்தையும் இக்கதையின் வாயிலாக, வாசிப்பவர்க்கு உணர்த்துகிறார் ஆசிரியர். 

சுட்டி அனுக்கிரஹாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!  மேலும் பல கதைகள் எழுதி, சிறார் இலக்கியத்தில் தடம் பதிக்க வாழ்த்துகள்!

Share this:

32 thoughts on “காணாமல் போன சிறகுகள் – அனுக்ரஹா கார்த்திக் (10 வயது)

 1. ரொம்ப அழகா இருக்கு. நல்ல கற்பனை வளம். நிறைய எழுதிப் பேரும் புகழும் பெற எனது வாழ்த்துகள்.

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
   மிக்க நன்றி புவனா!

  2. வாழ்த்துக்கள் அனு மா..நிறைய எழுதுங்கள்..

   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிசெளமி!

 2. மிக அருமையாக எழுதியிருக்கிறார் இதன் ஆசிரியர். வாழ்த்துகள் குட்டி🎊😍

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சூர்யா!

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயா!

 3. மிகவும் அழகான கதை. குழந்தைகளின் உலகம் எத்தனை விசித்திரமானது. அவர்களின் கற்பனைகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதை இக்கதையின் மூலம் புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சுட்டி அனு.. மேலும் பல வெற்றிகளைக் குவித்து சிகரம் தொட வாழ்த்துக்கள்.

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்னபூரணி!

 4. அருமையான கருத்துக்கள் கொண்ட கதை. குழந்தைகள் எப்பொழுதும் தன்னலம் பார்க்காமல் பொதுப்படையாக அனைவருக்கும் நலம் விரும்பி யாகவும் இருக்க வேண்டும். மேன்மேலும் வானளாவிய உயரத்திற்கு வளர வாழ்த்துக்கள்

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   1. Congratulations anu and her parents ❤ 💖 🌺 Story, Title and Moral was awesome 👌 Beautifully narrated by the little princess 👸 ❤ keep giving such kind of stories and keep growing. All the best for your future.

    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

 5. சுட்டி குழந்தைகளுக்கான
  குட்டி கதையயின் ஆசிரியர் என் அனு குட்டி என்பதில் எங்களின் பெருமை.
  வாழ்த்துக்கள் அனு
  மேலும் பல கதைகள் வடிக்க தாத்தாவின் ஆசிகள்

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

 6. அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் அனு💐💐💐

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

 7. Congratulations Anuma.
  Excellent story written by you to children’s like you. It is one of the best choice to the judges to select for first prize. Best moral.
  I wish you many more prizes to win
  -grandma

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

 8. 😍💞💞💞சூப்பர்… கற்பனை வேற லெவல்… இன்னும் அதிக கதைகள் எழுத வாழ்த்துக்கள் குட்டிமா 😍💞💞💞…

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

 9. ஆகா… சிறந்த கதை பாப்பா… கன்னிக்கோவில் இராஜா மாமாவின் பாராட்டுகள். வாழ்த்துகள் 🍭

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

 10. வாழ்த்துக்கள் அனு. உன்னுடைய கற்பனை திறனை புகழ வார்த்தைகளே இல்லை. நீ மேன்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்.

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

 11. வாவ்… சூப்பர்.. நல்ல சிந்தனை… கோர்வையான நடை.. வாழ்த்துக்கள் அனு..

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

 12. Very beautiful story.. I wish her to become a remarkable writer in future with God blessing.. best wishes dear

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

 13. ஆஹா..அருமையான சிந்தனை..குழந்தைகளின் சிறப்பான எண்ணங்களால் கதைகள் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையும் அழகாகிடும்..
  வாழ்த்துக்கள்மா

  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

Comments are closed.