கல்வியியலாளர் வே.வசந்தி தேவி

வசந்தி_படம்

6–12 வயது குழந்தைகளுக்கான சிறார் வாசிப்பு நூல்.

வே.வசந்தி தேவி:

  • பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தைத் துவங்கி, தனது இறுதி மூச்சு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, ஏளிய வீட்டுக் குழந்தைகளுக்காக உழைத்தவர்.
  • இரண்டு முறை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு வகித்த முதல் பெண்.
  • சிறந்த கல்வியாளர், பெண்ணுரிமைப் போராளி, சமூகப் போராளி எனப் பன்முகம் கொண்டவர்.

இந்நூல் குழந்தைகளுக்கு அம்மையாரின் வாழ்க்கையைச் சுருக்கமாகவும், எளிய மொழியிலும் அறிமுகம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. மிக எளிய மொழி வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டி ஆரம்ப நிலை வாசகர்களையும் உடனடி வாசிப்பில் ஈடுபடுத்தும்.

6–12 வயது தொடக்க மற்றும் நடுத்தர வாசகர்கள்;

கல்வியாளர், சமூகச் சாதனையாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பற்றியறிய விரும்பும் குழந்தைகள்;

குழந்தைகளுக்குத் தமிழ் வாசிப்பில் ஆர்வம் வளர்க்க விரும்பும் பெற்றோர் & ஆசிரியர் அனைவருக்கும்.

Editorial Note:-

வகைசிறார் வாசிப்பு நூல்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்+ புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18
விலைரூ 20/-
Share this: