அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2024  

Japanposter_pic

படம் நன்றி – (IBBY-Japan)

டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் நாள், 1967 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்களுள், நம்மிடையே மிகவும் பிரபலமானது ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்தாண்டு இவ்வமைப்பின் ஜப்பான் நாடு, இதை ‘ஸ்பான்சர்’ செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான போஸ்டரைத் தயாரித்து வெளியிட்டு இருப்பவர், குழந்தைகளுக்கான படக்கதைகளை எழுதி வெளியிட்டுள்ள ஓவியக் கலைஞர் நானே ஃப்யூரியா(Nani Furiya) ஆவார். 

புகழ் பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஈக்கோ கடோனோ (Eiko Kadono) குழந்தைகளுக்காக இந்நாளை ஒட்டிச் செய்தி வெளியிட்டுள்ளார்.  

1935 ஆம் ஆண்டு டோக்கியோவில் பிறந்த இவர், தம் ஐந்து வயதில் அம்மாவை இழந்தார். இவரது பத்தாவது வயதில், பசிபிக் போர் காரணமாக, வடக்கு ஜப்பானுக்கு இடம் பெயர்ந்தார். இளம் வயதிலேயே போரினால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டதால், தம் படைப்புகளில், உலக அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதுவரை 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவை 10க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழியாக்கம் பெற்றுள்ளன. 2018 ஆம் ஆண்டு, ஹான் ஆண்டர்சன் விருதைப் பெற்றுள்ளார்.

இவர் இந்நாளுக்காக எழுதியுள்ள செய்தியின் தமிழாக்கம் கீழே:-

உலகு எங்கிலும் வாசிப்பை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த கவனத்தை மேம்படுத்தவும், புதிய போஸ்டர் மூலமாகவும் பல்வேறு நிகழ்வுகள் மூலமாகவும் பரப்புரை செய்யப்படுகின்றது.  பல்வேறு பள்ளிகளிலும் புத்தகக் கடைகளிலும் இந்த நாளையொட்டி, சிறப்பான நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன; நூலகங்களில் கதைகளைச் சொல்லிக் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியனவாகும்.     

இந்நாளில் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்கள் அல்லாத கதை நூல்கள் வாங்கிக் கொடுத்து, கற்பனை சிறகுகளை விரித்துக் கடல்களைத் தாண்ட ஊக்குவிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *