இலஞ்சிப் பூக்கள் சொன்ன கதை

இலஞ்சி_படம்

இலஞ்சி மரக்காட்டில் வீவி என்ற பெயருடைய ஒரே ஒரு குட்டிப் பறவை இருந்தது. அது பாடவும், ஆடவும் செய்ததால், இலஞ்சிக்காடே மகிழ்ச்சியால் திளைத்தது.

அக்காட்டு மரங்களில் பூக்கள் பூத்த போது, தேனை உறிஞ்சுவதற்கு வசதியாக வீவிக்கு ஊதுகுழல் போன்ற அலகை, இலஞ்சித் தாத்தா கொடுத்தார்.  பழம் தின்னவும், கொட்டையை உடைக்கவும், பூச்சிகளைப் பிடிக்கவும், மீன் பிடிக்கவும்  ஏற்றவாறு வீவிக்கு புதிய புதிய அலகுகள் கிடைத்துப் புதிய தோற்றங்களைப் பெற்றது.  இலஞ்சி மரத்தாத்தா நோய்வாய்ப்பட்ட போது, மரங்கொத்தியின் அலகைப் பெற்று, வீவி அவரைக் குணப்படுத்தியது.

பருவநிலைக்கேற்றவாறு வீவி என்னென்ன உருமாற்றங்களை அடைகிறது என்பதைத் தெரிந்து கொள்ளப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளை வாசிக்கச் செய்யுங்கள்.

இயற்கையழகு பற்றியும், விதவிதமான பறவைகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் வண்ணப்படங்கள் நிறைந்த குழந்தைகள் கதை.

வகைமொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
மலையாளம் தமிழாக்கம்பி.வி.வினோத்குமார் உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை +91
விலை₹ 35/-
Share this: