ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட இளையோருக்கான நூல் வரிசையில் எழுத்தாளர் இ.பா.சிந்தன், ‘ஜானகி அம்மாள்-இந்தியாவின் கரும்புப் பெண்மணி’, ‘பல்வங்கர் பலூ’ என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
இவர் ‘குட்டிஸ்டோரி’ https://www.youtube.com/c/KuttiStoryKids என்ற யூடியூப் சானலை நிர்வகிக்கிறார். இதில் மனைவி தீபா, மகள் யாநிலா ஆகியோருடன் இணைந்து, குழந்தைகளுக்குக் கதை சொல்கிறார்.
‘அரசியல் பேசும் அயல் சினிமா’, பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘நிழல் இராணுவங்கள்’ என்ற நூல், தமுஎகசவின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதைப் பெற்றுள்ளது.