சினிமாப் பெட்டி

Cinemapetti_pic

இது ஒரு குறுங்கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு. ஒரு நாள் வேகமாக ஓடும் போது, கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். முழங்கால் எலும்பில் அடி பட்டதால், மருத்துவர் மாவு கட்டு போட்டுவிட்டு, ஒரு வாரம் லீவில் இருக்கச் சொல்லி விட்டார். இன்னும் இரண்டு நாளில் பள்ளியில் இருந்து, சினிமாவுக்கு மாணவர்களை அழைத்துப் போக ஏற்பாடாகி இருந்தது. தான் போக முடியவில்லை என்பதில், ரகுவுக்கு ரொம்ப வருத்தம்.

ரகுவின் அண்ணன் மோகன் 10ஆம் வகுப்பு படிக்கிறான். மிகவும் பொறுப்பானவன். அவன் வீட்டிலேயே அட்டைப் பெட்டியைக் கொண்டு சினிமாப் பெட்டி தயாரித்துப் படம் காட்டி, தம்பியின் வருத்தத்தைப் போக்க முயல்கிறான். 

நண்பர்களுடன் சேர்ந்து மோகன் என்னென்ன பொருட்களைக் கொண்டு, சினிமாப் பெட்டி தயார் செய்தான்? அதன் மூலம் எப்படிப் படம் காட்டினான்? என்று தெரிந்து கொள்ளக் கதையை வாசியுங்கள்.  இதை வாசிப்பதன் மூலம், நீங்களும் வீட்டிலேயே இது போல் செய்யக் கற்றுக் கொள்ளலாம். 6-12 குழந்தைகளுக்கான கதை. அமேசான் கிண்டிலிலும், இந்நூல் கிடைக்கின்றது.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்அப்பு சிவா
வெளியீடுநீலவால்குருவி, சென்னை-92 செல் 9840603499
விலைரூ 50/-
Share this: