சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

chuttithirdbday_pic

சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

குழந்தைகளின் பாடப் புத்தகம் தாண்டிய வாசிப்பை, ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சுட்டி உலகத்தைத் துவங்கினோம். அண்மை காலத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில், என்னென்ன தலைப்புகளில், நூல்கள் வெளி வந்துள்ளன? இக்காலத்தில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள் யார், யார்? எந்த எந்தப் பதிப்பகங்கள், குழந்தை நூல்களை வெளியிடுகின்றன? என்பன போன்ற, விபரங்களைச் சுட்டி உலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைத் தேர்வு செய்ய, சுட்டி உலகத்தில் வெளியாகியுள்ள நூல் அறிமுகங்கள், பெற்றோருக்குப் பெரிதும் உதவும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அறிமுகங்கள், சுட்டி உலகத்தில் வெளிவந்துள்ளன.

இது வரையிலான சுட்டி உலக வலைத்தளத்தின் பார்வை, 58000ஐ கடந்துள்ளது என்பது, மகிழ்ச்சியான செய்தி. எங்கள் காணொளியில் குழந்தைப் பாடல்களும்,கதைகளும் வெளியாகின்றன. 

தொடர்ந்து பயணிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: