சுட்டிப் பேச்சு – ஜூலை 2021

chutti talk july 2021 cover

உறவினர்:- பாப்பா! ஒன் பேரு என்னா?

சுட்டி:- பி. இந்து

உறவினர்:- ஒன் நாய்க்குட்டி பேரு ?

சுட்டி:- பி. ஜிம்மி.

உறவினர்:- 😂 🤣

2

எல்.கே.ஜி ஆன்லைன் வகுப்பு:

ஆசிரியை:- குழந்தைகளா!  கடலேர்ந்து நீர் ஆவியாகி மேலே போயி மேகமாகுது; மேகம் மழை பெய்ஞ்சி ஆறாகுது.  ஆறு ஓடி வந்து கடலில் கலக்குது. இது தான் வாட்டர் சைக்கிள். புரிஞ்சுதா? 

வகுப்பு முடிந்த பிறகு:-

சுட்டி:- அம்மா! அம்மா! எனக்கு மிஸ் சொன்ன அந்த வாட்டர் சைக்கிள் வேணும். வாங்கித் தரீங்களா?

அம்மா:- 😕 🙃

Share this: