1
சுட்டி:– “அம்மா! என்னை மாடி கிளாசில கொண்டு ஒக்கார வைச்சீங்கல்ல? என்னைக் கீழ் வகுப்புக்கு அனுப்பிட்டாங்க”
அம்மா:- “ஒன்னை மட்டுமா?”
சுட்டி:- “இல்ல, என் பையையும் தான்”.
அம்மா:-???
2
சுட்டி பள்ளியில் சேர்ந்த முதல் நாள்…
சுட்டி:- (ஆசிரியையிடம்) “நான் இந்த நாற்காலியில ஒட்கார்றேன்: நீங்க போயி, அந்த பெஞ்சில ஒட்காருங்க”
ஆசிரியை:- “நீ இங்க ஒட்காரக் கூடாது. அங்க போயி ஒட்காரு”
சுட்டி:- “என் தாத்தாவை வரச் சொல்லுங்க”
ஆசிரியை:- “தாத்தா இப்ப வர மாட்டாங்க; மணியடிச்சாத் தான் வருவாங்க”
சுட்டி:- “அப்ப மணியை அடிங்க”.
ஆசிரியை:- ?????
3
அம்மா:– “தம்பி! ஒன் பக்கத்துல, ஒட்கார்ந்துருக்கிற பையன் பேரு என்னப்பா?”
சுட்டி:-“தெரியாது மா”.
அம்மா:- “நாளைக்கு கேட்டுட்டு வா”
மறுநாள்:-
அம்மா:- “பேரு கேட்டுட்டு வந்தியா?”
சுட்டி – “பக்கத்துல ஒருத்தன் ஒட்கார்ந்திருப்பான்னு, சொன்னீங்கல்ல? இந்தப் பக்கம் பார்த்தா, அத்தினி பேரு ஒட்காந்திருக்கானுங்க; அந்தப் பக்கம் பார்த்தா, அத்தினி பேரு ஒட்கார்ந்திருக்கானுங்க. யாரு பேரைன்னு கேட்கறது?”
அம்மா:-??
4
அப்பா:- தம்பி! கார் கேரேஜ் கதவு தொறந்திருக்குது. அங்கப் போயி கொஞ்சம் பார்த்துக்கிறியா?
சுட்டி:- நான் தனியாயிருந்தா, திருடன் என்னைத் திருடிட்டுப் போயிடுவாரு அப்பா!
அப்பா:- ????
5
அம்மா:- (சாப்பாடு ஊட்டும் போது) “தம்பி இதைச் சாப்பிடு”.
சுட்டி:- “என்னால சாப்பிட முடியல மா; காலு வலிக்குது”.
அம்மா:- “இதுக்கும், கால் வலிக்கும் சம்பந்தம் இல்ல. நீ இதைச் சாப்பிட்டா, ஒன் காலு ரொம்ப நல்லாயிருக்கும்”.
சுட்டி:- “இல்லம்மா. இதைச் சாப்பிட்டா, என் ரெண்டு காலும் வலிக்க ஆரம்பிச்சிடும்.”
அம்மா:- ???
6
அம்மா:- “தம்பி! நான் தாத்தா வீட்டுக்குப் போறேன்”.
சுட்டி:- “ஏன் மா?”
அம்மா:- “என் அப்பா அம்மாவைப் பார்க்கணும்னு ஆசையாயிருக்கு”.
சுட்டி:- (ஒரு நிமிடம் யோசித்து) “நான் ஒன்னை அழைச்சிட்டுப் போக முடியாது மா”
அம்மா:- “ஏன்?”
சுட்டி:- “ஏன்னா, அவங்க வீடு ரொம்ப தூரத்துல இருக்கு. என்னால நடக்க முடியாது. ஆனா ஒங்களைப் பொம்மை கடைக்குக் கூட்டிட்டுப் போக முடியும், அப்பா காரில”.
அம்மா:-??