சிம்பாவின் சுற்றுலா

simbavin sutrula book cover

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.   

சிம்பா என்ற சிங்கமும், பாரதி என்ற பையனும், சுற்றுலா செல்கிறார்கள்.  சிங்கம் என்றதுமே பெரியவர்களுக்கு அதன் கர்ஜனையும், வேட்டையாடுதலும் தாம், நினைவுக்கு வரும்.  காட்டுக்கு ராஜா என்பது பொதுப்புத்தியில் ஊறிப்போன கற்பனை.  ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை.  இதில் சிங்கம், ஜாலியாகச் சிறுவனுடன் சுற்றுலா செல்கிறது.  வனிதா என்கிற பெண்ணிடம் சென்று, நண்பனுடன் சேர்ந்து  முகத்தில் வண்ணத்தைப் பூசிக் கொள்கிறது.    

மரத்தில் மீன் காய்த்துத் தொங்குகிறது.  ஒரு கோழி நூறு முட்டைகளைப் போடுகின்றது.  தங்குத் தடையில்லாமல் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்கின்றது.  வாசிக்கின்ற குழந்தைகளும் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள்.

ஆங்கிலப் புத்தகம் போல், தரமான வண்ண ஓவியங்களுடன் கூடிய பதிப்பு.  

தமிழ்ச் சிறார் இலக்கியத்தின், நம்பிக்கை நட்சத்திரமான ரமணாவுக்குப் பாராட்டும், வாழ்த்தும்!  தொடர்ந்து எழுத வாழ்த்து! 

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர் ரமணா (ஆறு வயது)
வெளியீடுவானம் பதிப்பகம்
விலைரூ 150/-
சிம்பாவின் சுற்றுலா – நாவல்
Share this: