ஒரு பூ ஒரு பூதம்

oru poo oru boodham book cover

ஒரு பூ ஒரு பூதம்

கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன.  இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது.

முதல் மூன்றும் நேரடி நீதி போதனையாக இல்லாமல், கதை மூலம் அறத்தை மறைமுகமாகப் போதிப்பவை.  நான்காவது கதையான “25 வது ஆடு எங்கே?” முடியும் போது, சிரிப்பை வரவழைத்தது.  ரிவாஸின் புத்திசாலித்தனமும், பண்ணையாரின் முட்டாள்தனமும், மிகவும் ரசிக்கக் கூடியதாய் இருந்தது. 

ஆறாவதாக உள்ள “என்னால் பார்க்கமுடியவில்லை” என்ற கதையின் முடிவு, யூகிக்க முடியாமலும், நகைச்சுவையுடனும் அமைந்து வாசிக்கச் சுவையாயிருந்தது.  “மியாவ் தத்துவம்” கதையின் முடிவு, நல்ல நகைச்சுவையுடன், சிந்திக்கவும் வைத்தது. இது சிறுவர்க்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கான கதையும் கூட.

“ஒரு பூ, ஒரு பூதம்” ஏற்கெனவே வாசித்திருந்த கதை ஒன்றினை நினைவுபடுத்தியது.  “ஒரு சிறுமியும், பனிரெண்டு நண்பர்களும்” வழக்கமான கதை தான்.  முடிவும் யூகிக்கக் கூடியதே. நாயும் பூனையும் இன்று வரை விரோதியாக இருப்பதற்கான காரணத்தைக் கூறும் கதையும், “சிங்கமும் சிறு வண்டும்” கதையும், குழந்தைகளைப் பெரிதும் மகிழ்விக்கக் கூடியவை.    

சிறந்த வாசிப்பின்பம் தரக்கூடிய, சுவாரசியமான சிறுவர் கதைத்தொகுப்பு.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்மருதன்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை (+91)9176549991
விலை₹ 70/-
ஒரு பூ ஒரு பூதம்

Share this: