பூமிக்கு அடியில் ஒரு மர்மம்

boomiku adiyil oru marmam book cover

நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில்  எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். 

ஜெயசீலனுக்குத்  தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட கண்ணன் என்ற சிறுவனும், வெளியூரிலிருந்து அவன் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்கள்.  ஒருநாள் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஊர் சுற்றும் போது, சுயம்புநாதர் கோவிலில் ஒரு சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மறுநாள் இவர்களுடன் அன்வரும், புகழ்மணியும் சேர்ந்து கொள்ள, அனைவரும் இருட்டுச் சுரங்கத்துக்குள் செல்கிறார்கள்.  அங்கு அவர்கள் பயங்கரமான கரடி போன்ற கருப்பு உருவத்தைக் கண்டு பயந்து அலறுகிறார்கள்.  அந்த உருவத்திடமிருந்து, பிரச்சினை ஏதுமின்றி அவர்கள் தப்பித்தார்களா? சுரங்கத்தின் உள்ளே புதையல் ஏதும் இருந்ததா? என்பது போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள, நூலை வாங்கி வாசியுங்கள்.

இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானது; மாற்றுத் திறனாளிகளை நாம் வெறுத்து ஒதுக்காமல், அவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை, இளையோர் மனதில் விதைக்கும் நாவல்.

சாகசமும், சஸ்பென்சும் கலந்த இளையோர் நாவல்.        

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்யெஸ்.பாலபாரதி
வெளியீடுவானம் பதிப்பகம்,சென்னை (9176549991)
விலை₹ 140/-
பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
Share this: