ஆமை காட்டிய அற்புத உலகம்

aamai kaatiya arpudha ulagam book cover

குமார் ஆறாம் வகுப்பு மாணவன்.  நண்பர்களுடன் சேர்ந்து, ஞாயிறன்று கடலில் குளிக்கச் செல்கிறான்.  அவர்கள் குளிக்கத் தயாராகும் போது, “யாராச்சும் காப்பாத்துங்களேன்,” என்ற சத்தம் கேட்கிறது.  அது ஜூஜோ என்ற 60 வயது, ஆமையின் குரல்.  பாறைக்குள் இடறித் தலைகீழாக விழுந்த ஆமையை, மாணவர்கள் காப்பாற்றி, உதவி செய்கிறார்கள்.  அவர்கள் செய்த உதவிக்குக் கைமாறாக, ஆமை அவர்களை ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று, அற்புத உலகைக் காட்டுகின்றது.

கடலுக்கடியில், திருக்கை மீன்களின் வால்களைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வேகமாக நீந்துகிறார்கள். பவளப்பாறைகள், ஒளிரும் ஜெல்லி மீன், ஆபத்தான சுறா மீன்,  கடலுக்குள் இருக்கும் எரிமலை டால்பின் மீன், திமிங்கலம் ஆகிய அதிசயங்களைக் கண்டு, களித்துக் கரைக்குத் திரும்புகிறார்கள்.

மாணவர்கள் கடல்வாழ் உயிரன்ங்கள் பற்றிய, அறிவியல் செய்திகளை அறிந்து கொள்ள தோதாக, ஆங்காங்கே கட்டம் கட்டிக் கொடுத்திருப்பது, வரவேற்க வேண்டிய விஷயம்.  

எண்ணெய்க்கழிவுகள், ரசாயனம் பிளாஸ்டிக் கழிவு ஆகியவற்றை மனிதன் கடலில் கொட்டுவதால், கடல் மாசு அடைந்து, கடல்வாழ் உயிரனம் பாதிப்புக்குள்ளாகிறது என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், ஏற்படுத்தும் நாவல்.

விறுவிறுப்பும், சாகசமும் நிறைந்த, ஆழ்கடல் பயணம்! 

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்யெஸ்.பாலபாரதி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 65/-
ஆமை காட்டிய அற்புத உலகம்
Share this: