உயிர்களிடத்து அன்பு வேணும்

uyirgalidathu book cover

இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன  தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஓவியங்களை வரைந்தவர், கி.சொக்கலிங்கம்.

நன்மை செய்தால், நல்லது கிடைக்கும்; துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர் இன்பமாக வாழலாம்,  கருமியாக இல்லாமல், பிறருக்கு உதவ வேண்டும் போன்ற அறநெறிகளையும், நல்ல எண்ணங்களையும் விதைக்கும் கதைகள் பல; 

ஒவ்வொருவருக்கும் இயற்கையாய் இருக்கும் நிறமே, அழகு; நிறத்தில் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை; கறுப்பு மட்டமான நிறமில்லை என்ற கருத்தைக் குழந்தைகள் மனதில் பதிக்கும் கதை, ‘நிறம் மாறிய காகம்’

பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதில்லை; எல்லா உயிர்க்கும் உரியது.  இயற்கையை நேசித்து, மற்ற உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய கருத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்கும் கதை, ‘உயிர்களிடத்து அன்பு வேணும்.’  

குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய நீதிக்கதைகள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்தொகுப்பும் மொழிபெயர்ப்பும் – யூமா வாசுகி
வெளியீடுஎஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம், சமயபுரம்,திருச்சி
விலைரூ 160/-
உயிர்களிடத்து அன்பு வேணும்
Share this: