அகிலாண்ட பாரதி.S

akila_padam_pic

நெல்லைச்சீமை தென்காசி அருகே இடைகால் கிராமத்தில் பிறந்த இவர்,  மதுரை மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவமும், கண் மருத்துவமும் பயின்று மருத்துவராகப் பணி செய்கிறார்.  இதுவரை சுமார் பத்து நாவல்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி, பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.  மருத்துவக் கல்லூரி மாணவியின் வாழ்வை அடிப்படையாக வைத்து, இவர் எழுதிய ‘நினைவின் வழிப்படூஉம்’ எனும் நாவலைச் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அமேசான் கிண்டிலில் சிறுவர் கதை மின்னூல்கள் வெளியிட்டுள்ளார்.  ’பூஞ்சிட்டு  எனும் சிறுவர் இணைய இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். ‘கதை சொல்லு கதை கேளு’ என்னும் புலனம் குழுமத்தைத் தொடங்கி, சுமார் இரண்டரை ஆண்டுகளாக இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குத் தினமும் தவறாது, பழைய, புதிய  கதைகளைச் சொல்லி வருகிறார். இந்நிகழ்வு ஆயிரம் கதைகளைத் தாண்டி இருப்பதுடன், அதைக் கேட்கும் குழந்தைகள் தங்கள் பள்ளியில் கதை சொல்லும் போட்டியில் கலந்து கொள்வதுடன் பல பரிசுகளையும் அள்ளுகிறார்கள். டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், கண்மணி  எனப் பல வார இதழ்களில் தொடர் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருகிறார், இந்தக் ’கதைசொல்லி’.

Share this: