ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான். அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர். எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச் சென்று காவல் இருக்கச் சொன்னார் அப்பா.
முதல் இரண்டு மகன்களும் காவலுக்குப் போய்ப் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டனர். மூன்றாம் நாள் இவான் போனான். நடு இரவில் ஒரு அதிசயக் குதிரை வயலுக்குள் இறங்கிக் கோதுமையைத் தின்றது. தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன அதன் பிடரி முடி, நிலவில் பளபளவென மின்னியது.
அந்தக் குதிரையைப் பிடித்து அடக்கிவிட்டான் இவான். தன்னை விட்டுவிட்டால் அவனுக்குத் தேவையான போது உதவுவதாக அந்தக் குதிரை சொன்னது.
சில நாட்கள் கழித்து அந்த ஊர் அரசர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய மகள் இளவரசி எலீனா அரண்மனை மாடத்தில் உட்கார்ந்து இருப்பாள். அவள் கையில் ஒரு மோதிரம் போட்டிருப்பாள். யார் ஒருவர் அந்த மாடத்தின் மேல் ஏறி அந்த மோதிரத்தைப் பெறுகிறாரோ, அவருக்கே இளவரசியைக் கல்யாணம் பண்ணித் தருவேன் என்று அரசர் கூறினார்.
அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர் யார்? எப்படி அதைச் செய்ய முடிந்தது? என்று தெரிந்து கொள்ளக் கதையை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள். வழ வழ தாளில் வண்ணப்படங்கள் நிறைந்த கதைப்புத்தகம்.
வகை | மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை |
ஆசிரியர் தமிழாக்கம் | எம்.புலாட்டோ சரவணன் பார்த்தசாரதி |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 |
விலை | ரூ 45/- |