அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் (1769-1859) குறித்த இக்கட்டுரைகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ குழந்தைகள் அறிவியல் இதழில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிவந்தவை. இவற்றைத் தொகுத்து, ஓங்கில் கூட்ட அமைப்பு அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளியிட்டிருக்கிறது.
அறிவியல் ஆய்வாளர்கள் அறையை விட்டு வெளியே வந்து உலகைக் கவனிக்க வேண்டும்; பின்னிப் பிணைந்திருக்கும் இயற்கை, நமக்கு ஏராளமான அறிவியலைத் தருகின்றது என்று சொல்லி, ஆய்வுலகின் திசையை மாற்றிய ஜெர்மானிய ஆய்வாளர் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்டைப் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் இம்மின்னூல் சுருக்கமாக விளக்குகின்றது.. .
2019 ஆம் ஆண்டு ஹம்போல்ட்டின் 250 ஆம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மனித நடவடிக்கையால் தூண்டப்படும் காலநிலை மாற்றம் குறித்து, முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் இவரே என்றும் தட்பவெப்ப நிலையை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும், சமவெப்பக் கோடுகளைப் பற்றியும் இவரே முன்மொழிந்தார் என்றும் தெரியும்போது, சூழலியலுக்கு இவர் ஆற்றியிருக்கும் பங்கையும், இவர் ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. .
காலநிலை மாற்றம் கவனம் பெற்றிருக்கும் இந்நாளில், இவரைப் பற்றியும், இவர் ஆய்வுகள் பற்றியும் தெரிந்து கொள்ள, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய மின்னூல்.
வகை | சிறுவர் கட்டுரை மின்னூல் |
ஆசிரியர் | முனைவர் ஹேமபிரபா |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் https://www.amazon.in/dp/B092SQ9XD9 |
விலை | ₹ 49/- |