பெரியார் பிஞ்சு

periyar pinju magazine cover

மூட நம்பிக்கையை ஒழித்து, குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் கட்டுரைகளும்,, படக்கதைகளும் அமைந்துள்ளன.  மதநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வால்டேர் பற்றிய படக்கதை சிறப்பு. இன்னொரு படக்கதை மனித உடலில் உள்ள தோல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்கின்றது.  இனி வரும் காலங்களில் டிஜிட்டல் ஐன்ஸ்டீனுடன் உரையாடலாம் என்பது வியப்பளிக்கும் செய்தி       

ஸ்லாத் என்ற பாலூட்டியைப் பற்றிய செய்திகள், மேற்கு ஆப்பிரிக்க நாடான சியேரா லியோனி பற்றி ஒரு கட்டுரை, குழந்தைகளின் ஓவியங்கள், புதிர்கள், சிறார் எழுத்தாளர் விழியன் எழுதிய கதை என்று வாசிக்கும் குழந்தைகளை மகிழ்விப்பதோடு, பொது அறிவுச் செய்திகள் பலவற்றை அறிந்து கொள்ளவும் உதவும் இதழ்..

அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் மாத இதழ்
வடிவம்அச்சு
வெளியீடுபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல்,84/1 (50) ஈ.வெ.கி.சம்பத் சாலை,சென்னை-600007. (044-26618163)
விலைதனி இதழ் ₹ 20/- ஆண்டுச்சந்தா ₹240/-
பெரியார் பிஞ்சு
Share this: