ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர். துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
18 பக்கங்கள் உள்ள இந்நூல், முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை படங்களால் ஆனது. பக்கத்துக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே உள்ளன. காட்டுவழியில் இரவில் பயணம் மேற்கொண்டால் என்னவெல்லாம் பார்க்கலாம்? காட்டில் இரவில் நடமாடும் உயிர்கள் (இரவாடிகள்) எவை? என்பதையெல்லாம், இதில் படக்காட்சியாகக் கொடுத்துள்ளார். வெளவால்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி விழித்திருக்கின்றன. மின்மினிப் பூச்சிகள் விளக்குகளாய் ஒளிர்கின்றன. ஆந்தைகள் விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கின்றன.
வாசிப்பின் முதல் நிலையில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கான படக்கதை இது.
வகை | மொழிபெயர்ப்புப் படக்கதை |
ஆசிரியர் | ஜூனூகா தேஸ்பாண்டே. தமிழில் சாலை செல்வம் |
வெளியீடு | குட்டி ஆகாயம்,கோயம்புத்தூர் (+91) 9843472092 |
விலை | ₹60/- |