காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை போன்ற அறிவியல் செய்திகளை, வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும், ஆசிரியர் விளக்கியுள்ளார்.
இன்றைய நாய்கள் சாம்பல் நிற ஓநாய்களிடமிருந்து தோன்றியவை, , பன்றிகள் மிகவும் சுத்தமான விலங்குகள்; துரதிர்ஷ்டவசமாக, நம்மூரில் சாக்கடை நீர் தான் அவைகளுக்குக் கிடைக்கிறது என்பன போன்ற பொது அறிவுச் செய்திகள், அடங்கிய நூல்.
இந்த நூல், இரண்டு பாகங்களாக, வெளியாகியுள்ளது. முதல் பாகமான இதில் நாய், ஆடு, செம்மறி ஆடு, பன்றி, மாடு ஆகியவை குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | ஜி.சரண் (ஜி.சரவணன் பார்த்தசாரதி) |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) |
விலை | ரூ 30/- |