தேனி சுந்தர், அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவியல் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர். தேனி மாவட்டம் நாராயண தேவன் பட்டி இவரது சொந்த ஊர்.
‘டுஜக் டுஜக் – ஒரு அப்பாவின் டைரி’, ‘சீமையில் இல்லாத புத்தகம்’, ‘ஒங்கூட்டு டூணா-வகுப்பறைக் குறிப்புகள்’, ‘மாணவர் மனசு’, ‘நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன’, ‘திட்டமிடாத வகுப்பறைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள சிறார் வாசிப்பு நூல்களில், இவரது ‘நட்சத்திரக்குழந்தை’ என்ற நூலும் ஒன்று. குழந்தைமை குறித்த இவரது நூல்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றவை.