தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழ், ‘ஓங்கில் கூட்டம்’ எனத் தொடர்ந்து சிறார் இலக்கியம் சார்ந்து இயங்குகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பொருளாளராக இருக்கின்றார்.
‘எனக்குப் பிடிச்ச கலரு’, ‘குட்டித் தோசை’, ‘சாவித்திரியின் பள்ளி’, ‘ஒலாடா’, ‘எலக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். ‘நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர் இவரே. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
https://www.panchumittai.com என்ற இணையதளம் வழியே சமகாலச் சிறார் உலகை ஆவணப்படுத்தி வரும் இவர், கதை சொல்லியாகவும் பயணிக்கிறார்.