ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது
“காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும் சண்டை போடாதே” என்று அதன் பெற்றோர் எடுத்துச் சொல்லியும், குட்டிக்குரங்கு கேட்கவில்லை.
இலையுதிர்காலத்தில் மரங்களில் உணவு கிடைக்காமல் போகவே, அது கீழே இறங்க வேண்டிய கட்டாயம். அப்போது மற்ற பறவைகளும், விலங்குகளும் “இது எங்க ஏரியா” என்று அதனைத் துரத்துகின்றன.
முடிவு என்ன ஆயிற்று? அதற்குத் தீனி கிடைத்ததா? குட்டிக்குரங்கு தன் தவறை உணர்ந்ததா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள்.
‘பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல; அனைத்து உயிர்க்கும் சொந்தமானது; எல்லாம் தனக்கு மட்டுமே வேண்டும் என்று எண்ணாமல் அனைவரோடும் பகிர்ந்துண்ண வேண்டும்’ போன்ற உயர்ந்த கருத்துகளை இக்கதை மூலம், குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள்.
இந்நூலின் ஆசிரியர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த அழகழகான வண்ண ஓவியங்கள், இந்நூலை அலங்கரிக்கின்றன. வழவழப்புத் தாளில், குழந்தைகள் வாசிக்க ஏதுவாகப் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட நூல். அவசியம் வாங்கி, உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 50/- |