இதில் 12 கதைகள் உள்ளன. யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது. கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள். கொரோனா பரவாமல் இருக்க, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை ஒரு கதை சொல்கிறது.
காக்காக்களுக்கும் சுப்ரமணி, பொன்னு,தமிழ் என்று பெயர் வைத்துக் கூப்பிடுகிறார்கள். மிக்சர் இல்லாமல் சாப்பிட மாட்டேன் எனச் சுப்ரமணி காக்கா அடம் பிடிக்கின்றது.
உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்துக்களைக் கருவாகக் கொண்டு சில என வாசிக்கச் சுவையான கதைகள்.
அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | சு.பிரவந்திகா |
வெளியீடு:- | லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18. செல் +91 98412 36965 |
விலை | ₹ 100/-. |