மழைக்காடு என்றால் என்ன? அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல். ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது வெறும் 6 சதவீதமாகக் குறைந்துவிட்டன என்பதும், காட்டுத்தீ என்ற பெயரில் தொல்குடியினரின் இனப்படுகொலையும் நடக்கிறது என்பதும் அதிர்ச்சியூட்டும் செய்திகள்.
உலகில் மழைக்காடுகளைக் கொண்டிருப்பவை ஏழை நாடுகளே. வருமானத்தைப் பெருக்க அந்நாடுகள் காட்டையழிக்கின்றன என்பது பொய்ப் பரப்புரையென்றும், காடழிப்பின் பின்னணியில், வளர்ந்த நாடுகளின் நுணுக்கமான பொருளாதார அரசியல் வலை பயங்கரமாகப் பின்னப்பட்டுள்ளது என்றும், ஆதாரங்களுடன் இச்சிறு நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
தெரியாத செய்திகள் பல தெரிந்து கொள்ள உதவும் நூல் என்பதோடு, இம்மண்ணில் உயிர்கள் நிலைத்திருக்க மழைக்காடுகள் எவ்வளவு அவசியம் என்பதையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உணர்த்தும் நூல்.
வகை | சூழலியல் கட்டுரை |
ஆசிரியர் | நக்கீரன் |
வெளியீடு | காடோடி பதிப்பகம்,6,விகேஎன் நகர், நன்னிலம்-610105. செல் +91 8072730977. |
விலை | ₹ 30/- |