ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார். இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் (Bilingual) கொடுத்திருப்பதால் குழந்தைக்கு எந்த மொழி பரிச்சயமோ, அதில் வாசிக்கலாம். ஒரு கேரட் அளவு கூட இல்லாத குட்டி முயலைப் பெரிய முயல்கள் கிண்டல் செய்வதும், அடித்துத் துன்புறுத்தவும் செய்கின்றன.
சீக்கிரம் பெரிய முயலாகத் தான் வளரவேண்டும் என அது தினமும் கடவுளை வேண்டுகின்றது. அது ஆசைப்பட்டபடியே ஒரு நாள் வளர்ந்து விடுகின்றது. அதற்குப் பிறகு துணிச்சலுடன் அது செய்யும் சாகசங்கள் தாம் கதை
கறுப்பு வெள்ளை படங்களுடன் கூடிய குழந்தைகள் கதை.
வகை | குழந்தை கதை மொழிபெயர்ப்பு |
ஆசிரியர் – ஆங்கிலம் தமிழாக்கம் | ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) கொ.மா.கோ.இளங்கோ |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை +91 9444960935 |
விலை | ₹ 30/- |