புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
வாசிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடித்தவை. ‘புதிய வேர்கள்’ எனும் தலைப்பில், சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஊஞ்சல் (https://unjal.blogspot.com) இவரது வலைப்பூ. முகநூல் ஐடி- Kalayarassy Pandiyan.
அமேசான் கிண்டிலில் Kalayarassy.G என்ற பெயரில், சில சிறுவர் கதைகளை மின்னூலாக வெளியிட்டுள்ளார். சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘சுட்டி உலகம்’ https://chuttiulagam.com எனும் வலைத்தளத்தைத் துவங்கி, அதன் ஆசிரியர் குழுவில் உள்ளார். இதில் சிறுவர் நூல் அறிமுகம், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் குறித்த விபரங்கள் ஆகியவை வெளியாகின்றன. சிறுவர் பாடல், கதை சொல்லுதல் ஆகிய காணொளிகளையும் சுட்டி உலகம் வெளியிடுகின்றது. பூஞ்சிட்டு https://poonchittu.com எனும் சிறுவர் மின்னிதழிலும், ஆசிரியர் குழுவில் உள்ளார்.
இவர் எழுதியுள்ள சிறுவர் நூல்கள் வருமாறு:-
- மந்திரக்குடை – சிறுவர் நாவல் (அச்சு) – புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு (பாரதி புத்தகாலயம், சென்னை).
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – சிறுவர் கதைகள் – அமேசான் மின்னூல்
- பூதம் காக்கும் புதையல் – சிறுவர் நாவல் – அமேசான் மின்னூல்
- மந்திரக்குடை – சிறுவர் நாவல் – அமேசான் மின்னூல்
- சூரியன் எங்கே? – சிறுவர் நாவல் – அமேசான் மின்னூல்
- பீட்டர் முயலின் கதை – மொழிபெயர்ப்புக் கதை – அமேசான் மின்னூல்
- கடற்கரையில் ஒரு நாள் – மொழிபெயர்ப்புக் கதை – அமேசான் மின்னூல்
- Nara and Sara – Children short story – Amazon ebook